ஸ்ரீநகர்:

41 சிஆர்பிஎப் வீரர்களை  பலி வாங்கியுள்ள புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் உள்ள காட்சிகள் குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

காஷ்மீர் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள்  சென்ற வாகனம் மீது  ஜெய்ஷ்இ முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த அடில் அகமது காடி என்ற தற்கொலை படையை சேர்ந்த 22வயது இளைஞன் 350 கிலோ அளவிலான  வெடிப்பொருட்களை நிரப்பிய காரைக்கொண்டு, மோடி வெடிக்கச்செய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளான். இந்த கோர தாக்குதலில் 41 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகி உள்ளனர்.

இந்த தாக்குதலை நடத்திய தற்கொலை படை பயங்கரவாதி அகமது,‘ கையில் ரைபிளுடன் நிற்கும்  புகைப்படம்  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், தாக்குதல் நடைபெற்ற இடத்தில் வாகனம் மற்றும் வீரர்களின் உடல்பாகங்கள் சிதறி கிடக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. தாக்குதல் நடை பெற்ற இடம் சுடுகாடு போல காட்சியளிக்கிறது..

இதை பார்க்கும் ஒவ்வொருவரின் நெஞ்சமும் பதறித் துடிக்கிறது… இதுபோன்ற பயங்கரமான, மனிதாபிமற்ற செயல்களும் ஈடுபடும் பயங்கரவாதிகளை வேறொரும், வேரடி மண்ணோடும் ஒழிக்க வேண்டும் என்றும் ஆவேசமாக கூறி வருகிறார்கள்.