சாரன்பூர்

த்திரப் பிரதேசம் சாரன்பூர் பகுதியில் கள்ளச்சாராயத்தை அருந்தி மரணம் அடைந்த 70 பேர் உடல் ஒரே நேரத்தில் தகனம் செய்யபட்டது.

உத்திரப் பிரதேசம் மற்றும் உத்திர காண்ட் மாநிலத்தில் கள்ளசாராய வியாபாரம் அமோகமாக நடந்து வருகிறது.    இதை தடுக்க அரசு அவ்வப்போது சோதனைகள் நடத்திய போதும் மீண்டும் கள்ளச்சாராய வர்த்தகம் மீண்டும் ஆரம்பிப்பது வழக்கமாகி உள்ளது.

சமீபத்தில் கள்ளசாராயம் அருந்தி ஏராளமானோர் மரணம் அடைந்துள்ளனர்.   அதிக பட்சமாக சாரன்பூர் பகுதியில் சுமார் 70 பேர் மரணம் அடைந்துள்ளனர்.   இதை ஒட்டி அரசு சோதனை நடத்தியதில் நூற்றுக்கணக்கான லிட்டர் அளவுள்ள கள்ளச் சாராயம் பிடிபட்டுள்ளது.

இந்நிலையில் சாரன்பூர் பகுதியில் உள்ள கிராமத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து இறந்த 70  பேருக்கு ஒரே நேரத்தில் ஈமச் சடங்குகள் செய்துள்ளனார்.   அனைவரும் உடலும் ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.