சென்னை:
மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ள விவசாயிகளுக்கான திட்டங்கள் மற்றும் நிதிஉதவி நடவடிக்கைகளை மேற்கொண்ட 13 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்து உள்ளது.
சமீபத்தில் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி உள்பட பயிர் காப்பீட்டுசலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைசெயல்படுத்தும் வகையில்,தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உளளது.
வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் ஒருங்கிணைப்பு அதிகாரியாக செயல்படுடும் இந்த குழுவில் தமிழகஅரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் மேலும் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவின் தலைமைச் செயலக ஒருங்கிணைப்பு அதிகாரியாக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தி விவசாய நிதி உதவி திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 73 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தை கணக்கிட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
[youtube-feed feed=1]