சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் தமிழ கமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது தனது மகளின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.
ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகனுக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில், இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வரும் 11ந்தேதி சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் திருமணமும், அதைத்தொடர்ந்து அன்று மாலை பிரமாண்டமான திருமண வரவேற்பும் நடைபெற உள்ளது. முன்னதாக ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நேற்று தினம் திருமண வரவேற்பு நடைபெற்றது.
முன்னதாக சவுந்தர்யா தனது தாய் லதா ரஜினிகாந்த்துடன் கடந்த 6ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று, தனது திருமண அழைப்பிழ் வைத்து பூஜை செய்தார். அதைத் தொடர்ந்து முக்கிய நபர்களுக்கு திருமண அழைப்பிதழ் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று காலை முதல்வரின் கிரின்வேஸ் சாலை இல்லத்துக்கு சென்று நேரில் மகளின் திருமண அழைப்பிதழை கொடுத்த்து சந்தித்துப் பேசினார். அதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், திருமணத்திற்கு வருவதாக முதலமைச்சர் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.