சென்னை:
பொங்கலையொட்டி வெளியான படங்களான ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படமும், அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் படமும் ரூ.200 கோடிக்கு மேல் வசூலாகி இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
பொங்கலையொட்டி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்துள்ள பேட்ட திரைப்படம் வெளியானது. அதே நாளில் சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்த விஸ்வாசம் திரைப்படமும் வெளியானது.
இரண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த 10ம் தேதி நாடு முழுவதும் வெளியாகி பரபரப்பு ஓடி வருகிறது. ரஜினியின் பேட்ட படத்தை எதிர்த்து விஸ்வாசம் களமிறங்கியதால், படம் வெற்றிபெறுமா என கேள்விக் குறி எழுந்த நிலையில், விஸ்வாசம் படம், பேட்ட படத்தை தூக்கி சாப்பிட்டு வசூலை வாரி குவித்து வருகிறது. தமிழகம் தாண்டி வெளிநாடுகளிலும் வசூல் சாதனை செய்து வருகின்றது.
தமிழ்நாட்டில் விஸ்வாசம் படம் பேட்ட படத்தின் சாதனை முந்தினாலும் வெளிநாட்டில் பேட்ட கூடுதலான நல்ல வசூலை பெற்றுள்ளது. இந்நிலையில் பேட்ட திரைப்படம் ஜப்பான் நாட்டில் ரிலீசாகவுள்ளது. ஏற்கனவே முத்து படம் டான்ஸிங் மகாராஜ் என்ற தலைப்பில் ஜப்பானில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் பேட்ட படம் வந்தால் வசூல் ரீதியாக விஸ்வாசம் படத்தை முந்த வாய்ப்பி ருக்கிறது. அதே போல் விஸ்வாசம் தற்போது வரை ரூ 10 கோடி வசூலை கடந்துள்ளது, ஆனால், அஜித்திற்கு பெஸ்ட் மலேசியாவில் வேதாளம் தான். இந்த இரண்டு படங்களின் பிஸினஸ் மட்டும் மலேசியாவில் ரூ 25 கோடியை எட்டி உள்ளது.
இந்த இரு படங்களும் வெளியாகி 30 நாட்கள் ஆன நிலையில், பெட்ட மற்றும் விஸ்வாஸம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த திரையரங்கு விற்பனை தமிழ்நாட்டில் 234 கோடி ரூபாய் ஆக உயர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. உண்மையில், இரண்டு படங்களிலிருந்தும் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. , இதுவரை பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாக உள்ள பாகுபாலி சாதனையை இந்த படங்கள் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரு படங்களின் வெற்றி தமிழ் சினிமா வரலாற்றிலும் மறக்க முடியாத வெற்றியாக இருக்கும் என்று திரையுலக விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரையுலகினர் தெரிவித்து உள்ளனர்.