மதுரை:

ழனியில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் உலகப்புகழ் பெற்றது. இதற்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், புவிசார் குறியீடு குறித்து தொடரப்பட்டவழக்கில், பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு பெற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என,  உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.  வரும் 26ஆம் தேதிக்குள் பதிலளிக்க, இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பழனி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்து இருப்பதாக வும், விரைவில் புவிசார் குறியீடு கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பழனி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தம், பழனி முருகன் சிலையை நிறுவிய போகர் தயாரித்து வழங்கியது. இந்த பஞ்சாமிர்தம்  உடல் சிக்கல்களையும் தீர்க்க வல்லது என நம்பப்படுகிறது.

இதை வெறும் பூஜைப்பொருளாக மட்டும் இல்லாமல் உடலுக்கு தேவையான மருந்தாகவும் உள்ளது.  இதில், மலை வாழை, சுத்தமான நெய், நல்ல தேன் ஆகியவற்றால் செய்யப்படும் பஞ்சாமிர்தத்தை  காலையிலும் மாலையிலும் ஒரு சிட்டிகை பஞ்சாமிர்தம் எடுத்துக் கொண்டால் போதும் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தொற்றுக்களை சமாளிக்கும் அளவு உடல் ஆரோக்கியப்படுத்தப்படும். காய்ச்சல் சூட்டினைக் கூட கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் கொண்டது நம் பாரம்பரிய பஞ்சாமிர்தம்.