ஜினிகாந்த்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா, தொழிலதிபர் விசாகன் திருமணம் 11ந்தேதி நடைபெற உள்ள நிலையில் நேற்று ராகவேந்திரா திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நடைபெற்றது.

ஏற்கனவே திருமணமாகி மணமுறிவு ஏற்பட்ட ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கும் , தொழில் அதிபர் விசாகனுக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில், இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வரும் 11ந்தேதி சென்னையில் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


இவர்களது, திருமணம் வரும்11ம் தேதி, சென்னை லீலா பேலஸில் காலை 9.00 முதல் 10.30 முகூர்த்தத்தில் திருமணம் நடக்கிறது. இதில் இருவீட்டாரது நெருங்கி உறவினர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள்.

அன்று இரவு 8.30 மணியளவில் மற்றுமொரு வரவேற்பு நிகழ்ச்சியில், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில்,  இருவீட்டாரது நண்பர்கள் மற்றும் நெருங்கிய சினிமா பிரபலங்கள் இந்த நிகழ்சசியில் பங்கேற்றனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்  பங்கேற்ற அனைவருக்கும் விதை பந்துகள் வழங்கப்பட்டன.