புதுடெல்லி:

இந்தியாவின் பணவீக்கம் ஜனவரி மாதத்தில் விரைவாக அதிகரித்துள்ளதாக ராய்ட்டர்ஸ்  கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.


இது குறித்து கருத்துக் கணிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த வியாழனன்று அதன் முக்கிய கொள்கை விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளை குறைத்ததின் மூலம் பணவீக்கத்தை ஓரளவு தடுத்து நிறுத்த முடிந்தது.

குறைந்தபோயிருந்த பணவீக்க விகிதம் ஜனவரி மாதத்தில் விரைவாக உயர்ந்தது.

பணவீக்கம் அதிகரித்தாலும், உணவு மற்றும் எரிபொருள் ஆகியவற்றின் விலை உயரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்கிறார் பொருளாதார நிபுணர் விஷ்ணு வர்தன்.

இவ்வாறு கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.