சென்னை:

2019-20ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணைமுதல்வர் ஓபிஎஸ் தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.

இதில் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டு மானிய விவரங்கள் வருமாறு

உயர்கல்வித் துறைக்கு ரூ.4,584.21 கோடி ஒதுக்கீடு:

பள்ளிக் கல்வித்துறைக்காக ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ரூ.100 கோடி நிதியுதவி வழங்கப்படும்

ராமேஸ்வரத்தில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பெயரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும்

அண்ணா பல்கலை.யிலும், பொறியியல் கல்லூரிகளிலும் சர்வதேச தரத்தில் கற்பித்தலுக்கு தேவைப்படும் உபகரணங்கள், உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்

தனியார் பள்ளி மாணவர்களைவிட, தமிழக அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் திறன் வேகமாக வளர்ந்து வருகிறது

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச காலணி, பை மற்றும் இதர பொருட்களை வழங்குவதற்கு ரூ.1656.90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் சிறப்பு உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படும். இதற்காக 313.58 கோடி ஒதுக்கீடு..

அனைவருக்கும் கல்வி இயக்கம், இடைநிற்றல் கல்வி இயக்கம் ஆகியவற்றின்கீழ் மத்திய அரசு நிதி தரவில்லை நிதி உதவி கிடைக்காவிட்டாலும் தமிழக அரசு தொடர்ந்து இந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது

ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்காக மேலும் 20 விடுதிகள் கட்ட ரூ.40 கோடியும்

ஆதி திராவிட, பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்க ரூ.71.01 கோடியும்

ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கு பட்ஜெட்டில் ரூ.1,857.13 கோடி நிதி ஒதுக்கீடு

பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு ரூ.12,563 கோடி ஒதுக்கீடு

உலக வங்கி கடனுதவியுடன் ரூ.2,685.91 கோடி செலவில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்

அனைத்து நிலை மருத்துவமனைகளிலும் முக்கிய உடற்பரிசோதனைகள் தொகுப்பாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் திட்டம் செயல்படுத்தப்படும்

இத்திட்டத்திற்கு தேவையான உபகரணங்கள், கருவிகள், பொருட்கள் வழங்கப்படும் – சிகிச்சை நெறிமுறைகளும் உருவாக்கப்படும்

இத்திட்டத்திற்கு 3 ஆண்டுகளில் ரூ.247 கோடி ரூபாய் செலவிடப்படும்

ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் உதவியுடன் ரூ.5,890 கோடி செலவில் 12,000 புதிய பிஎஸ்-4 தரத்திலான பேருந்துகள்,

2,000 மின்சாரப் பேருந்துகளையும் வாங்கி பயன்படுத்தும் திட்டம்

சென்னை, கோவை, மதுரையில் முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்