நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகம் ஆகும் ‘வர்மா’ படம் காதலன் தினத்தன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படம் வெளியாவதில் தாமதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மார்ச் மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற திரைப்படமான ‘அர்ஜுன் ரெட்டி’. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்து வருகிறார். காதலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கி உள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்ற நிலையில் போஸ்ட் புரடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் போஸ்டர், டிரைலர் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் படம் காதலர் தினமான பிப்ரவரி 14ந்தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதால், மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.