விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, அஜித் தற்போது ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இயக்குனர் வினோத் இயக்குகிறார். பாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் ஜான்விகபூரை களமிறக்க ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அஜித் தற்போது நடித்து வரும் பிங்க் படம் பாலிவுட்டில் வெற்றிகரமாக ஒடியபடம். இதில், அமிதாப்பச்சன், டாப்ஸி ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கில், அஜித் நடித்து வருகிறார். அவருடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங் உள்பட நடிகை வித்யா பாலனும் நடிப்பதாக தகவல் வெளியாகிஉள்ளது.
ஸ்ரீதேவி – போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் ஏற்கனவே பாலிவுட்டில் அறிமுகி உள்ளார். இந்த நிலையில், அவரை தமிழ்படத்தில் நடிக்க வைக்க அவரது குடும்பத்தினர் ஆவலாக இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில், பிங்க் ரீமேக்கில் அஜித்கூட அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.