சென்னை:

பத்தாம் வகுப்பு வகுப்பு பொதுத் தேர்வுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வுகளை பிப். 21-ம் தேதி முதல் 28-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை, தொடர்புடைய பள்ளிகளும், மையங்களும் பிப்ரவரி 21 முதல் 28-ம் தேதிக்குள் தங்களுக்கு வாய்ப்புள்ள நாட்களில் நடத்தி முடிக்க வேண்டும்.

மார்ச் 7-ம் தேதிக்குள் மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் விலக்கு பெற்ற மாணவர்களின் பட்டியல்களை மாவட்ட கல்வி அலுவலர்களிடம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

மார்ச் 11 முதல் 15-ம் தேதிக்குள் மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்ற மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்படுகிறது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.