பெங்களூரு:

ர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்த ஆண்டில் முதல் கூட்டம் என்பதால்,  கர்நாடக மாநில கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றுகிறார்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இடையில் பாஜக மேற்கொண்ட  நடவடிக்கை காரணமாக, காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம் இடையே சலசலப்பு ஏற்பட்டது. சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குமாரசாமிக்கு எதிராக பாஜகவில் சேரப்போவதாகவும், குமாரசாமி குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் தெரிவித்ததாகவும் தகவல்கள் பரவின.

இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தலைமை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்றும்,  இவ்வாறு தொடர்ந்து பேசினால், பதவியை ராஜினாமா செய்வேன் என்று எச்சரிக்கை விடுத்தார். அதைத்தொடர்ந்து சர்சைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்,  கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (புதன்கிழமை) பெங்களூரு விதான சவுதாவில் தொடங்குகிறது. இது நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், மரபுப்படி சட்டசபையின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா நாளை உரையாற்றுகிறார்.