நாக்பூர்:
குடும்பத்தை கவனிக்க முடியாதவர்களால் நாட்டை நிர்வகிக்க முடியாது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அகில பாரதிய வித்தியார்த்த பரிஷத்தின் முன்னாள் நிர்வாகிகள், பாஜக
மாணவர் பிரிவினரிடையே கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர் , கட்சித் தொண்டர் ஒருவருடன் பேசினேன். கட்சி பெரிதா குடும்பம் பெரிதா என்று கேட்டேன். அவர் கட்சி தான் என் உயிர் என்றார்.
என்ன செய்கிறாய் என்று கேட்டேன். கடை வைத்திருந்தேன், வியாபாரம் இன்றி மூடிவிட்டேன். தற்போது வீட்டில் மனைவி, குழந்தைகள் உள்ளனர் என்றார் .
முதலில் குடும்பத்தையும் குழந்தையையும் கவனி. பின்னர் கட்சியை பார்த்துக் கொள்ளலாம் என்றேன். எவரொருவர் குடும்பத்தை கவனிக்கிறாரோ, அவராலேயே நல்ல நிர்வாகியாக இருக்க முடியும் என்றார்.