தமிழக விவசாயி குடும்பங்களின் வாழ்வாதாரமே நெல் பயிரிடுதல்தான். கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு விவசாய குடும்பத்தினரும், நல்லமுறையில் பயிர் விளைந்து நாடு செழிக்க வேண்டும் என்று இயற்கையை வேண்டிக்கொண்டு, நாற்று நடும் அழகே தனி.
நாற்று நடவு செய்யும்போது களைப்பு தெரியாமல் இருக்கவும், மன மகிழ்ச்சிக்காகவும் ஏற்றப்பாட்டு, ஏர்பாட்டு, நடவுப்பாட்டு, களையெடுப்புப் பாட்டு, கதிர் அறுப்புப் பாட்டு, நெல் தூற்றுவோர் பாட்டு, வண்டிக்காரன் பாட்டு என பல நிலை பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.