சென்னை:
மத்தியஅரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த, காகிதப் பூமாலை என்று அமுமக தலைவர் டிடிவி தினகரன் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
வருமானவரி விலக்கு உள்ளிட்ட ஒரு சிலவற்றைத் தவிர வாக்குகளை வாங்குவதற்காக வார்த்தை ஜாலங்கள் நிறைந்த, காகிதப் பூமாலையாக மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அமைந்துள்ளது
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 4 ஆண்டுகளாக மக்களை கசக்கி பிழிந்த அரசு, தேர்தலை மனதில் வைத்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது .
தனிநபர் வருமானவரி விலக்கு ரூ.5 லட்சமாக உயர்த்தி இருப்பது மக்கள் பட்ட காயங்களுக்கு சிறு ஆறுதல் என்றும், ஒரு சிலவற்றை தவிர வாக்குகளை வாங்குவதற்காக வார்த்தை ஜாலம் நிறைந்த காகிதப்பூ மாலையாக மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/ttv-dinakaran-comment-on-budget-the-lack-separate-projects-tamil-nadu-is-disappointing-340180.html