வாஷிங்டன்:

விசா மோசடி செய்து அமெரிக்காவில் தங்கி படித்துவந்த  129 இந்திய மாணவர்களை அமெரிக்க அரசு கைது செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதைத்தொடர்ந்து, வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் ஹெல்ப்லைன் தொலைபேசி எண்ணை அறிவித்து உள்ளது.

அமெரிக்காவில் படிக்க செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இவர்களில் பலர் போலியான பல்கலைக்கழகங்களில் படிப்பதாக கூறி விசா பெற்று அமெரிக்காவில் தங்கியிருந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து விசாரணை நடத்திய அமெரிக்கா அரசு, போலியான பல்கலைக் கழகத்தில்,  பதிவு செய்துவிட்டு அவர்கள் அமெரிக்காவில் தங்கியிருந்த மாணவர்களை  கைது செய்துள்ளது.  விசா மோசடி செய்து அமெரிக்காவில் தங்கியது தொடர்பாக 129 மாணவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அமெரிக்க அரசின் நடவடிக்கை இந்திய மாணவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையறிந்த இந்திய தூதரகம்,  கைது செய்யப்பட்ட இந்திய மாணவர்களை  மீட்க மத்திய வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.  இதற்காக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தொலைபேசின எண்கைளை அறிவித்து, பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் குடும்பத்தின்ர் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளது.

இந்த விவகாரம் இந்தியாவிலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதை கவனிக்க தனி பிரிவை வெளியுறவு அமைச்சகம் ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது சுமார் 600 மாணவர்கள் மத்தியில் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.