டில்லி:

மோடி அரசின் ஆணவமும், திறமையும் விவசாயிகளை அழித்துவிட்டது என்றும், ஒரு நாளைக்கு ரூ.17 அறிவித்திருப்பது விவசாயிகளை அவமதிக்கும் செயல் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

விரைவில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக அரசு நேற்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதில் நடுத்தர மக்களை குறிவைத்து சில சலுகை களை அறிவித்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

பட்ஜெட் குறித்து டிவிட் செய்துள்ள ராகுல்காந்தி, மோடி அரசின் திறமையற்ற ஆட்சி யும், ஆணவமும்  நம் நாட்டு விவசாயிகளை அழித்துவிட்டது.

ஒரு நாளைக்கு விவசாயிகளுக்கு வெறும் 17 ரூபாய் கொடுப்பது அவர்களை அவமதிக்கும் செயல் என்றும் டிவிட் போட்டுள்ளார்.