சென்னை:

சிரியர்கள் போராட்டம் காரணமாக பள்ளிகள் சுமார் ஒருவார காலம் முடங்கிய நிலையில், சனி, ஞாயிற்று கிழமைககளில் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

9அம்ச கோரிகைகளை வலியுறுத்தி, ஜாக்டோ, ஜியோ கடந்த வாரம் போராட்டம் நடத்தியது. இதன் காரணமாக சுமார் ஒரு வார காலம் பள்ளிகள் மூடப்பட்ட மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. இது பொதுமக்களிடையே கடுமையான அதிருப்திகை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஆசிரியர்கள் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த முதன்மை கல்வி அலுவலர்கள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விரைவில் பொதுத்தேர்வுகள் நெருங்க உள்ளதால்,  10, 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ரிவிஷன் டெஸ்ட் போன்றவை நடத்தும் வகையிலும், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தேவைக்கு ஏற்ப சிறப்பு வகுப்புகளை நடத்த தலைமை ஆசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவு அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்த, பள்ளித் தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து சிறப்பு வகுப்புகள் நடத்தலாம்  கல்வி அலுவலர்கள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். பள்ளி மாணவர்களின் நலன் கருதி, காலையும், மாலையும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது பற்றியும்  தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.