புதுடெல்லி:

ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சம் வரை பெறுவோருக்கு வரி விதிப்பிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படவுமில்லை. ஏற்கெனவே இருந்த வரி அடுக்குகளில் (TAX SLABS) மாற்றம் செய்யவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.


2019- ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தற்காலிக மத்திய நிதி அமைச்சர் ப்யூஸ் கோயல் வெள்ளியன்று தாக்கல் செய்தார்.

அமைப்புசாரா துறை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை மனதில் வைத்து இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதாக அறிமுகம் தரப்பட்டது.
நடுத்தர வர்க்க வரி செலுத்துவோருக்கு நிவாரணம் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ரூ. 5 லட்சம் வரையிலான வரி விலக்கு என்பது வரி அடுக்குகளிலும்(TAX SLABS) மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வரி அடுக்குகளில்( TAX SLABS ) மாற்றம் கொண்டு வர உத்தேசிக்கப்படவில்லை.

வரி விதிப்பில் இடைக்கால பட்ஜெட் என்ன சொல்கிறது?

மக்களவையில் மத்திய அமைச்சர் ப்யூஸ் கோயல் கூறும்போது, “ஏற்கெனவே இருக்கும் வரி விகிதம் 2019-20-ம் நிதி ஆண்டுக்கும் தொடரும். தனிப்பட்ட நபர் செலுத்தும் வரிக்கு ரூ. 5 லட்சம் வரையிலான முழு வரிச் சலுகை அளிக்கும் மாற்றத்தைக் கொண்டு வரப்படும்.

வரி விலக்கு என்ற இனத்துக்குள் வரும் ரூ. 5 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனி நபர்களுக்கு, வரி அடுக்குகளில் ( TAX SLABS) அரசு மாற்றம் செய்யவில்லை என்பதே இதன் அர்த்தம்.
ஏற்கெனவே செலுத்திய வரிக்கு முழுச் சலுகையை கொடுப்பதாகவே எடுத்துக் கொள்ளவேண்டும்.
நடப்பு வரி அடுக்கின் படி( 2019-20-ம் நிதி ஆண்டில் தொடருவோர்) ரூ.2.5 லட்சம் வரையிலான வருவாய் பெறுவோர் வரி செலுத்தவேண்டிய அவசியம் இல்லை.

மொத்த வருமானம் ரூ. 2.5 லட்சத்துக்கு அதிகமாகவும், ரூ. 5 லட்சத்துக்கு மிகாமலும் இருந்தால், ரூ.2.5 லட்சத்துக்கு வருமான வரியாக 5 சதவீதம் செலுத்த வேண்டும்.

உதாரணத்துக்கு, உங்களது ஆண்டு வருவாய் ரூ.3.5 லட்சமாக இருந்தால், மீதமுள்ள ரூ. 1 லட்சத்துக்கு 5 சதவீத வரியை செலுத்த வேண்டும்.
ரூ. 5 லட்சத்துக்கு மேலும், ரூ.10 லட்சத்துக்கு மிகாமலும் ஆண்டு வருமானம் இருந்தால், ரூ.12 ஆயிரத்துடன் சேர்த்து, மீதமுள்ள ரூ. 5 லட்சத்துக்கு 20 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.

அதாவது, உங்களது ஆண்டு வருமானம் ரூ.7 லட்சமாக இருந்தால், நீங்கள் ரூ.52 ஆயிரம் வரி செலுத்தவேண்டும் (12,500+ மீதமுள்ள ரூ.2 லட்சத்திலிருந்து 20%) வரி விதிக்கப்படும்.
மொத்த ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்தை தாண்டினால், ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 500 + ரூ.10 லட்சத்தை தாண்டும் தொகைக்கு 30% வரியும் விதிக்கப்படும்.

ரூ.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானம் பெறும் தனி நபருக்கு முழு வரிச் சலுகை என்று அரசு சொன்னாலும், ஏற்கெனவே இருந்த வரி அடுக்கு (TAX SLABS) முறையே தற்போதும் பின்பற்றப்படுகிறது.

 வரிச் சலுகையும் வரி விலக்கும் எவ்வாறு மாறுபடுகின்றன?

வரி விலக்கு என்று வரும்போது வருவாய், செலவினம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் வரி விதிக்கப்படாது. இந்திய வரி விதிப்பு முறைப்படி, தனிப்பட்ட நபர் ஓர் ஆண்டுக்கு சம்பாதிக்கும் ரூ.2.5 லட்சத்துக்கு மட்டுமே வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
வரிச் சலுகை என்று வரும்போது, ஏற்கெனவே வரி செலுத்தியிருந்தால், அதனை திரும்பப் பெறுவதற்கான நிவாரணம் வரி செலுத்துவோருக்கு வழங்குவதை குறிக்கிறது.
வருமானவரித் துறை சட்டத்தின் 87ஏ பிரிவின்படி, ரூ.2,500 வரிச் சலுகையோ( இதில் எது குறைவோ) அல்லது தனிநபர் மொத்த ஆண்டு வருமானம் ரூ.3.5 லட்சத்துக்கு மிகாமல் இருந்தாலோ செலுத்திய வரியை திரும்பப் பெற்றுக் கொள்ளும் வரிச் சலுகை உண்டு.
87ஏ பிரிவில் மாற்றம் கொண்டு வர அரசு உத்தேசித்திருக்கு பட்சத்தில், ரூ. 5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானம் பெறும் தனிநபருக்கு மத்திய அமைச்சர் ப்யூஸ் கோயல் முழு வரிச் சலுகை அளித்துள்ளார்.

அதாவது, வரி செலுத்தும் தனிநபர் ரூ.12,500 (ரூ.2.5 லட்சத்தில் 5%) வரிச் சலுகை பெறுவதாக அர்த்தம்.
மத்திய அமைச்சர் ப்யூஸ் கோயல் தமது பட்ஜெட் உரையில், ஆண்டுதோறும் ரூ.6.5 லட்சம் மொத்த வருவாய் ஈட்டுவோர் எந்த வரியும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்.

ரூ.6.5 லட்சம் வரையிலான வரிக் கணக்கீடு
வருமான வரித்துறைச் சட்டத்தின் 80சி பிரிவின் படி, ஆயுள் காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, எல்ஐசி பரஸ்பர நிதி, சுகன்யா சம்ரிதி கணக்கு போன்றவற்றில் முதலீடு செய்வதன்மூலம் ரூ.1.5 லட்சம் வரை வரிக் கழிவு உண்டு. வரி செலுத்துவோரின் மொத்த வருமானத்திலிருந்து இந்த வரிப் பிடித்தம் குறைக்கப்படும்.

தனிநபர் ஆண்டு மொத்த வருமானம் ரூ.6.5 லட்சம் இருந்தால், அவர்களுக்கு ரூ.5 லட்சம் உச்சவரம்பிலும் வரிச் சலுகை உண்டு. மீதமுள்ள ரூ.1.5 லட்சத்திலும் முதலீடு செய்வதின் அடிப்படையில் வரி கிடையாது.

அதாவது, ரூ.6.5 லட்சம் ஆண்டு வருவாய் ஈட்டுவோர் எந்த வரியும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
வருமானவரிச் சட்டத்தின் 80சி பிரிவின்படி,வரி பிடித்தம் செய்ய வழி வகுக்கிறது. இவ்வாறு வரி பிடித்தம் செய்யும் தொகையை அரசு தற்போது ரூ.50 ஆயிரமாக உயர்த்தியுள்ளது.

புதிய அறிவிப்புக்குப் பிறகு மொத்த பிடித்தம் எவ்வளவு?

80சி பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்ட பிடித்தம் தவிர(ரூ.1.5 லட்சம்) உத்தேசிக்கப்பட்டுள்ள ரூ.50 ஆயிரம் நிலையான பிடித்தமும் வரி செலுத்துவோர் திரும்பப் பெறமுடியும்.
80டி பிரிவின்கீழ், வரி செலுத்துவோருக்கோ அல்லது குடுபத்தினருக்கோ மருத்துவ காப்பீட்டு ப்ரீமியம் இருந்தால், பிடித்தம் திரும்ப கிடைக்கும். அதிகபட்சம் ரூ25 ஆயிரமும், குடும்பத்தில் உள்ள மூத்த குடியினருக்கு ரூ.50 ஆயிரம் வரையிலும் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திரும்பப் பெறலாம்.

மேற்கண்டவாறு அமைந்தால், ரூ.7.75 லட்சம் வரையிலான ஆண்டு வருமானம் உள்ள சம்பளதாரர்களுக்கும் இந்த பிடித்தம் திரும்ப கிடைப்பதும் வரிச் சலுகையும் கிடைக்கும்.

வரி அடுக்கில் மாற்றமில்லை

இடைக்கால பட்ஜெட்டில் வரி அடுக்கில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், வரிச் சலுகை (ரூ. 2,500-லிருந்து 12.500 வரை) அதிகப்படுத்தப்பட்டுள்ளது. நிலையான பிடித்தம் (ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக) உயர்ந்துள்ளது.

இந்த உத்தேச அறிவிப்புகள் நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டால், ரூ. 5 லட்சம் வரை மொத்த ஆண்டு வருமானம் பெறுவோர் வரி செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆனால், வருமான வரித் தாக்கல் செய்யும்போது நிவாரணம் கிடைக்கும்.

நிலைமை இப்படியிருக்க பாஜகவினர் உட்பட சிலர், இதனை ‘ வரி விலக்கு’ என்று முத்திரை குத்தியதைக் கூட அரசியல் என்று கடந்து சென்றுவிடலாம்.

ஆனால், ஊடகங்கள் சில ஒருபடி மேலே போய், வரி அடுக்குகளிலேயே (TAX SLABS) மாற்றம் செய்திருப்பதாக தவறான தகவலை மக்களுக்கு தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.