ராலேகான் சித்தி:
உண்ணாவிரத போராட்டத்தை கொச்சைப்படுத்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மீது, அன்னாஹசாரே அவதூறு வழக்கு தொடர உத்தரவிட்டு உள்ளார்.
லோக்பால் அமைக்க கோரி பிரபல சமூக சேவகரும், காந்திய வாதியுமான அன்னா ஹாசாரா தனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார்.
காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30ந்தேதி தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார். இன்று 3வது நாளாகஉண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து வருகிறது.
அவரது போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நவாப் மாலிக் சர்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். இதனால் கோபமடைந்துள்ள அன்னாஹசாரே அவர்மீது வழக்கு தொடர தனது ஆதரவாளர்களிம் தெரிவித்து உள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக், அன்னா ஹசாரே, இதுபோன்ற போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்துவதற்காக வழக்கறிஞர் களிடம் பணம் வாங்கிக்கொண்டே ஈடுபடுகிறார் என்று தெரிவித்தார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையறிந்த அன்னாஹசாரே, தனக்கு ஆதரவு தெரிவிக்க வந்த தேசியவாத கட்சியினரை சந்திக்க மறுத்த நிலையில், தன்னையும், தனது போராட்டத்தையும் அவதூறாக விமர்சித்த நவாப் மாலிக் மீது அவதூறு வழக்கு தொடரும்படி ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அன்னாஹாசாரே, நான் பணம் வாங்கிய தாக கூறுவதை அந்த அரசியல் கட்சி தலைவர் நிரூபிக்க வேண்டும் என்றும், அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரும்படி எனது ஆதரவாளர்க ளிடம் கூறியிருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
மேலும், மகாராஷ்டிராவில் 88க்கும் மேற்பட்ட பகுதிகளில் எங்களுக்கு ஆதரவாக மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டத்தை தடுத்து நிறுத்த அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது என்றும் குற்றம் சாட்டினார்.