சென்னை

ரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி அன்று தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் இரு தவணைகளாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முகாம்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் போலியோ முழுவதுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. அயினும் அதை தொடர்ந்து அளித்து வரும் இந்தியா இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒரு முறை வழங்க முடிவு செய்தது.

இந்த மாதம் மூன்றாம் தேதி நாடெங்கும் ஒரே தவணையில் வழங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. அதை ஒட்டி நாடெங்கும் உள்ள அனைத்ஹ்டு மாநிலங்களும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்த ஏற்பாடுகளில் ஈடுபட்டன. ஆனால் இந்த முகாமை தள்ளி வைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. போதுமான அளவு போலியோ சொட்டு மருந்து கையிருப்பு இல்லாததால் முகாம்கள் தள்ளி வைக்கப்பட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவித்தன.

அரசு இதை மறுத்தது. அதன் பிறகு இந்த மாதம் இரண்டாம் வாரம் அதாவது பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் வரும் மார்ச் 10 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெரும் என பொதுச் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.