டில்லி:

சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட அலோக் வர்மாவுக்கு தீயணைப்பு துறை தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஆனால், அவரது ராஜினாமாவை உள்துறை ஏற்க மறுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிதாக இடம் மாற்றப்பட்ட தீயணைப்பு துறை இயக்குநர் பதவியில்  ஒரு நாளாவது பணியாற்றிவிட்டு செல்லுங்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது.

சிபிஐ இயக்குனர்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் காரணமாக கடந்த மாதம்  11ந்தேதி  இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கில், அலோக் வர்மாவே சிபிஐ இயக்குனராக தொடலாம் என உச்சநீதி மன்றம்  அறிவித்தது. அவர் ஜனவரி 31ந்தேதியுடன் ஓய்வுபெற இருந்த நிலையில், அவரை தீயணைப்பு துறைக்கு மாற்றி தேர்வு குழு உத்தரவிட்டது.

இந்த நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  அதைத்தொடர்ந்து  மத்திய பணியாளர் நலத் துறைக்கு அலோக் வர்மா எழுதிய கடிதத்தில், சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து வெளியேறிய ஜனவரி 11-ம் தேதியை நான் ஓய்வு பெற்றதாக  அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

ஆனால், அவரது ராஜினாமா ஏற்க மறுத்த உள்துறை அமைச்சகம், தீயணைப்பு துறை இயக்குநர் பணியில் உடனடியாக சேர உத்தரவிட்டுள்ளது.  இன்று ஒரு நாள் அப்பணியில் சேர்ந்துவிட்டு ஓய்வு பெறுங்கள் என கூறியுள்ளது.