சென்னை:

ரசு எச்சரித்தும் பணிக்கு திரும்பாத 1273 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களுக்க சம்பள உயர்வு உள்பட சலுகைகள் வழங்கப் படாது என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட் டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை பணிக்கு திரும்பும்படி அரசு எச்சரித்தது. அதைத்தொடர்ந்து நேற்று 99 சதவிகித ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்.

இந்த நிலையில், அரசு எச்சரிக்கையும் மீறி இதுவரை பணிக்கு வராத ஆசிரியர்க ளுக்கு ‘மெமோ’ வழங்கப்பட்டு வருகிறது.  மெமோ  பெற்றவர்களுக்கு பணியின்போது, சம்பள உயர்வு, பதவி உயர்வு உள்பட எந்தவித சலுகைகளும் வழங்கபடாது என்று தெரிகிறது.

99 சதவீத ஆசிரியர்கள் வேலைக்குத் திரும்பி விட்டதால், இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளும் இயங்கி வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அதைத்தொடர்ந்து, இன்னும் ஓரிரு நாளில் பிளஸ்2 செய்முறை தேர்வு தொடங்க உள்ள நிலையில், அதற்கான பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை பணிக்கு வராமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரி யர்களுக்கு  தமிழ்நாடு குடிமைப்பணிகள் விதி 17(பி)ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான மெமோக்கள் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

போராட்டத்தின்போது, கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர்களில் 1273 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கும் விதி 17(பி)ன் கீழ் “மெமோ”  வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன்,  உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியை பொறுத்தவரை 99 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு வந்து விட்டனர். நேற்றிரவு வரை பணிக்கு வராதவர்கள் மீது 17-பி விதியின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்று காலையில் பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு 17பி-ன்படி “மெமோ” வழங்கப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மெமோவை பெற்றுக்கொண்டுதான் பணியில் அவர்கள் இன்று சேர முடியும். பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடங்கி விட்டது. இதுவரை 1082 ஆசிரியர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.