சிகாகோ:
அமெரிக்ககாவில் மத்திய மேற்கு மற்றும் கிழக்கு கடலோரப் பகுதியில் வாழும் 20 கோடிக்கும் மேற்பட்டோர், கடும் பனிப் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து சிகாகோவில் உள்ள தேசிய வானிலை மைய விஞ்ஞானிகள் கூறியதாவது:
கோளத்தின் வட மற்றும் தென் துருவங்களைச் சுற்றி குளிர் காற்று சூழ்ந்த ஒரு துருவச் சுழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவின் வட டகோட்டா, தெற்கு டகோட்டா மற்றும் மினசோட்டாவின் பகுதிகளில் மைனஸ் 50 டிகிரி வெப்பநிலை நிலவுகிறது.
2014-ம் ஆண்டுக்குப் பிறகு வட அமெரிக்காவை துருவச் சுழல் மீண்டும் சூழ்ந்துள்ளது.
மத்திய மேற்கு பகுதிகளில், இரண்டரைக் கோடி அமெரிக்கர்கள் 20 டிகிரி பாரன்ஹீட் குறைவான வெப்பநிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், மினசோட்டா மற்றும் டகோட்டாஸில் உள்ள சில இடங்களில் வெப்பநிலை குறைவாக உள்ளது.
செவ்வாய்க் கிழமையிலிருந்து வியாழக்கிழமைக்கு இடைப்பட்ட காலத்தில் மைனஸ் 30 முதல் 55 டிகிரி வெப்பநிலை நீடிக்கும். ஆர்க்டிக் மற்றும் அன்டார்டிக் பகுதிகளுக்கு மேலே உள்ள அடுக்கு மண்டலத்தில் குறைந்த -அழுத்த குளிர் காற்று எனப்படும் துருவச் சுழல் என்ற சுழன்று கொண்டிருக்கிறது.
சில நேரங்களில் குளிர்காலத்தில் துருவச் சுழல் சுழற்சி பலவீனமாகும். இதனால் காற்று அலைகள் பிளவுபட்டு தெற்கே நகரும் வாய்ப்புள்ளது.
உறைபனிக் காற்றை தாரைக் காற்றோட்டம் நகர்த்திச் சென்று, தெற்கில் இருந்து துருவ வளிமண்டலத்தில் கலைந்து போகச் செய்யும்.
இந்த துருவ காற்றுத் திரவம் எப்போதுமே சுழன்று கொண்டிருந்தாலும், கடந்த 2014-ம் ஆண்டுதான் முதன்முதலாக துருவச் சுழல் என்று பெயரிடப்பட்டது. துருவச் சுழல் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் பனிப் புயல் மேலும் சில நாட்களுக்கு நீடிக்கலாம்.
புவியின் வளிமண்டலத்தில் சில வாயுக்களின் செறிவுகள் அதிகரித்துள்ளன. உலகளாவிய வெப்பநிலை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகவே பதிவாகியுள்ளது. கடல் பரப்பும் வெப்பமடையத் தொடங்கியிருக்கிறது.
எனினும், பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த 40 ஆண்டுகளாக துருவச் சுழலின் வேகம் அதிகரித்தே வந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு சிகாகோ தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, துருவச் சூழல் காரணமாக மிச்சிகன், விஸ்கான்சின், மினசோட்டாவில் 2,300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடும் உறைபனியால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவக்கின்றன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டுள்ள ட்வீட் செய்தியில், ” உறைபனியால் ஒரு நிமிடம் கூட மக்களால் வெளியே வர முடியவில்லை, இந்த நரக வாழ்க்கையிலிருந்து எப்போதுதான் மீளுவோமோ? மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் பத்திரமாக இருக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.