டில்லி:

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. இதில் அவரது தண்டனை ரத்து செய்யப்படுமா என்பது தெரிய வரும்.

1998ம் ஆண்டு ஒசூர் அருகே நடைபெற்ற பஸ் உடைப்பு தொடர்பான  வழக்கில், முன்னாள் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு  3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை  எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணா ரெட்டி மேல்முறையீடு செய்திருந்தார். ஆனால், அவர் மீதான தண்டனையை ரத்து  செய்யவோ,  நிறுத்தி வைக்கவோ முடியாது எனக்கூறி இடைக்கால மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்சநீதி மன்றத்தில் கடந்த 17ந்தேதி மனுதாக்கல் செய்திருந்தார்.  இந்த மனுமீதான விசாரணை இன்று  உச்சநீதிமன்றத்தில்நடைபெற உள்ளது.