டில்லி
ஐசிஐசிஐ வங்கி முன்னாள் இயக்குனர் சந்தா கோச்சார் வீடியோகோனுக்கு கடன் வழங்கியதில் நடந்த முறையீட்டை விசாரித்து வந்த சிபிஐ அதிகார் சுதான்ஷு தார் மிஸ்ரா உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஐசிஐசிஐ வங்கியில் ரூ. 300 கோடி கடன் வாங்கிய வீடியோகோன் நிறுவனம் அதை திருப்பித் தராததால் சிபிஐ விசாரணையை தொடங்கியது. அப்போது ஐசிஐசிஐ முன்னாள் இயக்குனர் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாருக்கு வீடியோகோன் துணை நிறுவனத்தின் அதிகபட்ச பங்குகள் அளிக்கப்பட்டது தெரிந்தது. அதை ஒட்டி கடன் அளிப்பதற்கு சந்தா கோச்சர் லஞ்சம் பெற்றதாக சிபிஐ வழக்கு பதிந்தது.
இந்த மாதம் 22 ஆம் தேதி பதிந்த இந்த வழக்கில் சந்தாவின் கணவர் தீபக் கோச்சர் மாற்றும் விடியோகொன் நிறுவனத் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோர் உள்ளிட்ட மேலும் சிலர் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை பதிந்தவர் சிபிஐ அமைப்பின் சூப்பிரண்ட அதிகார் சுதான்ஷு தார் மிஸ்ரா ஆவார். இவர் இந்த வழக்கை பதிந்த அடுத்த நாளே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இடமாற்றம் நடந்து இரு நாட்களுக்குப் பிறகு முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி சிபிஐ பதிந்துள்ள வழக்கு தவறான பாதையில் செல்வதாகவும் விசாரணை முடிவு குறித்து ஆலோசனைகள் அளிப்பதாகவும் சமூக வளை தளத்தில் தெரிவித்திருந்தார். நேற்று முன் தினம் அதை தற்போதைய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதை மறுபதிவு செய்தனர்.
இது குறித்து அரசு அதிகாரி ஒருவர், “அருண் ஜெட்லி ஒரு மூத்த தலைவர் என்னும் முறையில் அறிவுரை அளித்துள்ளார். அவரோ அல்லது வேறு யாரும் இந்த வழக்கில் மற்றும் இட மாற்றத்தில் தொடர்புடையவர்கள் இல்லை இது சிபிஐ தலைமையின் உத்தரவுக்கிணக்க நடந்துள்ளது. என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஆனத்த் சர்மா, ”இதை பார்க்கும் போது இந்த வழக்கில் மெதுவாக செல்லுமாறு அருண் ஜெட்லி அழுத்தம் அளிப்பதாக தோன்றுகிறது. அது மட்டுமின்றி அவருடைய கருத்துக்கள் சிபிஐ அமைப்பை தாமதப்படுத்துவது மட்டுமின்றி மிரட்டும் தொனியிலும் அமைந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.