பெங்களூரு

பிரிட்டானியா பெயரில் போலியாக லோகோ தயாரித்து பிஸ்கட் தயாரித்த நிறுவனக்கிடங்கில் காவல்துறையினர் சோதனை இட்டனர்.

பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனம் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமாகும். நாடெங்கும் சிற்றூர்கள் உள்ளிட்ட பல இடங்களின் இந்த நிறுவனத்தின் பிஸ்கட்டுகள் விற்பனை ஆகின்றன. இந்நிறுவனம் குட்டே, டைகர், மில்க் பிகிஸ் மற்றும் மாரி கோல்ட் ஆகிய பெயர்களில் பிஸ்கட்டுகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

பெங்களூருவில் ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பல இடங்களில் பிரிட்டானியா போலி லோகோவுடன் வேறு நிறுவன பிஸ்கட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதை பிரிட்டானியாவின் ஆய்வுக் குழு கண்டறிந்து புகார் அளித்துள்ளனர். அதை ஒட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

இந்த பிஸ்கட்டுக்கள் யேலகங்கா பகுதியில் அபூர்வா மருத்துவமனையில் உள்ள ஒரு கிடங்கில் இருந்து விற்பனையாளர்களுக்கு அளிக்கப்பட்டதை அறிந்த காவல்துறையினர் அங்கு சோதனை இட்டனர். அப்போது அச்சு அசலாக பிரிட்டானியா பிஸ்கட் போலவெ போலி லோகோவுடன் பாக் செய்யப்பட்ட பிஸ்கட்டுகள் ஏராளமாக கிடைத்துள்ளனர்.
அனைத்தும் ஒரிஜினல் போலவே இருந்தாலும் பிஸ்கட்டுகள் மீது மாரி டிலைட் என பெயரிடப்பட்டிருந்தது. அந்த பிஸ்கட்டுகள் ஐதராபாத்தில் உள்ள ரிங்கேஷ் எண்டர்பிரைசஸ் என்னும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவைகள் ஆகும். இந்த பிஸ்கட்டுக்கள் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடாகவில் விற்கப்பட்டுள்ளன.

காவல்துறையின் குழுவினர் ஐதராபாத் விரைந்து அந்த பிஸ்கட் நிறுவன உரிமையாளர்களுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.