குறுஞ்செய்தி வலைதளங்களான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசேஞ்சர் போன்றவையுடன் , பிரபல சமூக வலைதள மான பேஸ்புக் செய்தி சேவை இணையதளமும் இணைந்து செயல்பட முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிவடை யும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது தனித்தனியாக செயல்பட்டு வரும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசேஞ்சர் போன்ற சமூக குறுஞ்செய்தி வலைதளங்களுடன், பேபுஸ்புக் செய்தி வலைதளமும் இணைந்து பணியாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது ஒரு நீண்டகால திட்டம் என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர் பெர்க் தெரிவித்து உள்ளார்.
தற்போது தனித்தனியாக இயங்கி வரும் இந்த தளங்கள், ஒருங்கிணைக்கப்பட்டால், வாட்ஸ்அப் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நேரடியாக செயல்பட முடியும். தற்போது இந்த வசதிகள் இல்லாததால், இதை செயல்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பணிகள் முடிவடையும் எதிர்பார்க்கப்படுகிறது.