சென்னை:

ழக்கமாக ஒவ்வொரு ஆண்டு ஜனவரி மாதம் மற்றும் பிப்ரவரி மாதங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து முகாம் இந்த ஆண்டு தள்ளிப்போவதாக தமிழக சுகாதாரத் துறைஅமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.

நாட்டில் போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோய்களின்  தாக்கத்தில் இருந்து குழந்தைகள் பாதுகாக்கும்  வகையில் ஆண்டுதோறும் தமிழகத்தில் ஜனவரி மாதம் இறுதியிலும் பிப்ரவரி மாதத்திலும் 2 கட்டங்களாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்தஆண்டு, குறிப்பிட்ட தேதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாகத்தான் போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் கடந்த 14 ஆண்டுகளாக புதிய போலியோ தொற்றில்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்து.

மத்திய மருந்துத் துறையின் தொழில்நுட்பக் குழுவினரின் நிர்வாகக் காரணங்களால் நிகழாண்டின் போலியோ சொட்டு மருந்து புகட்டும் தேதி தள்ளிப்போகிறது, விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.