சென்னை:

துரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்ள வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டப்படும் என்று தமிழ்புலிகள் அமைப்பின் தலைவர் திருமுருகன் காந்தி தெரிவித்து உள்ளார்.

சமீபத்தில் மத்திய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தி உள்ளது. வரும் பிப்ரவரி மாதம் முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில்,  27ந்தேதி  மதுரை வரவுள்ள பிரதமர் மோடிக்கு எதிராக திருமுருகன் காந்தி முன்னிலையில் கருப்புக்கொடி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இநத் போராட்டத்துக்கு மதுரை காவல் துறை அனுமதி வழங்கி உள்ளது. அதைத் தொடர்ந்து மதுரை காவல்துறை ஆணையாளர்,   டேவிட்சன் தேவாசிர்வாதம் தலைமையிலான குழு கருப்புக்கொடி போராட்டம் நடைபெற உள்ள இடத்தை ஆய்வு செய்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி,  கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்ற  பாதுகாப்பு கண்காட்சியை பார்வையிட சென்னை வந்த பிரதமர் மோடிக்கு கோ பேக் மோடி என்ற வாசகத்துடன் கருப்பு ஹீலியம் பலூன் பறக்க விடப்பட்டது. ஆனால், அற்போது றக்க விடப்படவில்லை. கருப்புக்கொடி ஏந்தி கோஷம் மட்டுமே தெரிவிக்கிறோம் என கூறி உள்ளார்.

இந்த கருப்புக்கொடி போராட்டத்தில்  சுமார் 160 அமைப்புகள் பங்குபெறும் என்று தெரிவித்துள்ள காந்தி, நாடாளுமன்ற தேர்தலை கவனித்தில்கொண்டே உயர் ஜாதியினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கி உள்ளது என்று குற்றம் சாட்டினார்.

பாரதியஜனதா கட்சிக்கு மத்திய பிரதேச தேர்தலில் 5.5 லட்சம் நோட்டா வாக்கு விழுந்தது.  இந்த வாக்குகளை பதிவு செய்தவர்கள் அத்தனை பேரும்  உயர்ஜாதியினர்.  அவர்களை  பேன்றவர்களிடம் மீண்டும்  நன்மதிப்பைப் பெறவே  தேர்தல் சமயத்தில் திட்டமிட்டு மோடி இவ்வாறு அவர்களுக்கு சலுகை அறிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.