லகாபாத்

கும்ப மேளா விழாவை ஒட்டி உத்திரப் பிரதேச அமைச்சரவை கூட்டத்தை அலகாபாத்தில் நடத்த முதல்வர் யோகி முடிவு செய்துள்ளார்.

அலகாபாத் நகரில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளின் சங்கமம் உள்ளது.  இது திரிவேணி சங்கமம் என அழைக்கப்படுகிறது.    திரிவேணி சங்கமம் மற்றும் கங்கையில் புனித நீராடினால் புண்ணியம் என நம்பப்படுகிறது.  இதனால் இந்த நகரில்  எப்போதும் பக்தர்கள் கூட்டம் காணப்படும்.

கும்ப மேளா

தற்போது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பமேளா அலகாபாத் நகரில் நடந்து வருகிறது.    அதை ஒட்டி நாடெங்கிலும் இருந்து பலரும் கங்கை மற்றும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட அலகாபாத் நகருக்கு வந்துள்ளனர்.   இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை யோகி அரசு செய்துள்ளது.

விழாவுக்காக ரூ.5100 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.   இந்த கும்ப மேளாவின் மூலம் அலகாபாத் மீண்டும் தனது பழைய பொலிவை  திரும்பப் பெறும் என கூறிய பல எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த திட்ட்ங்களுக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.  ஆயினும் இது  மக்களவை தேர்தலுக்கான தேர்தல் ஸ்டண்ட் எனவும் விமர்சித்துள்ளன்ர்.

கும்ப மேளா சமயத்தில் உத்திரப் பிரதேச அமைச்சர்கள் புனித நீராட வேண்டும் என முதல்வர் யோகி விரும்பி உள்ளார்.   ஆகவே அவர்கள் புனித நீராட வசதியாக அமைச்சரவை கூட்டம் அலகாபாத் நகரில் நடைபெற உள்ளது.   அலகாபாத் நகரில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.