டில்லி:

ராணுவத்தில் செயல்பட்டு வரும்  காவல்துறையில் 20 சதவிகிதம் பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்திக்குறிப்பில், ராணுவத் துறையில் உள்ள போலீஸ் பிரிவில் பெண்களை சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மொத்தம் உள்ள காலியிடங்களில் 20 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் நடைபெறும்.

ராணுவப் பொலிஸில் பெண்களின்  பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான நோக்கத்துடன் ராணுவ பொலிஸில் பெண்களை ஈடுபடுத்துவதற்கான “வரலாற்று” முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது என பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.