சென்னை

தொடர்ந்து 7 ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரிகரித்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதை ஒட்டி கடந்த ஒன்றரை மாதம் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத உயர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் மிகவும் துயரம் அடைந்து வந்தனர். இதற்கு காரணம் கச்சா எண்ணெய் விலை உயர்வு என அரசால் சமாதானம் கூறப்பட்டது.

அதன் பிறகு மெல்ல சிறிது சிறிதாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையத் தொடங்கியது. அதனால் சிறிது மன நிம்மதி அடைந்த மக்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சியாக பெட்ரோல் மற்றும் டிசல் விலை உயரத் தொடங்கி உள்ளது. தொடர்ந்து 7 நாட்களாக மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதால் மக்கள் கடுமையாக அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடந்த 9 ஆம் தேதி அன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.71.07க்கு விற்கப்பட்ட்டது. தற்போது பெட்ரோல் ரூ.2.08 அதிகரித்து இன்று லிட்டருக்கு ரூ.73.15 என்னும் விலையில் விற்கப்படுகிறது. டீசல் விலை ரூ.66.01 ஆக இருந்தது ரூ.2.41 அதிகரித்து இன்று லிட்டருக்கு ரூ.68.42 க்கு விற்பனை செய்யப்படுகிறது.