டில்லி:

கில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி  சமீபத்தில் துபாய் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நேர்காணலின்போது இளம்பெண் ஒருவர் ராகுலிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு மடக்கியதாகவும், அதன் காரணமாக நேர் காணல் சந்திப்பு இடையிலேயே நிறுத்தப்பட்டதாக போலியான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த செய்திகளை இந்தியாவில் பாஜக ஆதரவு ஊடகங்கள் வெளியிட்டு அலப்பறையில் ஈடுபட்டன. தமிழகத்தில் தீவிர பாஜக பக்தரான துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குரூமூர்த்தியும் இதுகுறித்து பதிவிட்டு ராகுல்காந்தி மீது கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தார்.

ஆனால், அது போலியானது.. ஏற்கனவே அந்த பெண் குழந்தை வேறொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதை எடிட் செய்து வெளியிடப்பட்டுஇருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இதை யடுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், துபாயில் ராகுலுடன் நடந்த நேர்காணல் நிகழ்ச்சி குறித்த வீடியோவை, காங்கிரஸ் சோசியல் மீடியா மற்றும் டிஜிட்டல் மீடியா நிர்வாகியுமான நடிகை ரம்யா எனப்படும் திவ்யா ஸ்பந்தனா காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வமான டிவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்.

ராகுல் கலந்துகொண்ட நேர்காணல் வீடியோ: (கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்)

https://twitter.com/incindia/status/1083958834429739008?s=12

https://twitter.com/incindia/status/1083749843397271552?s=12

மேலே வீடியோவில் கல்லூரி மாணவ மாணவிளிடையே ராகுல் பேசும் நேர் காணல் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், பாஜக ஆதரவினர் தெரிவித்துள் ளதுபோல நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை… என்பதும்… நாடாளுமன்ற தோல்வி பயத்தில் உள்ள பாஜக திட்டமிட்டே ராகுல்மீது இதுபோன்று சேறுகளை வாரியிறைத்து அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி செய்தது அம்பலமாகி உள்ளது.

ராகுல்காந்தி குறித்து போலியான செய்திகளை பாஜகவுக்கு ஆதரவாக வெளியிட்ட ஊடகங்கள் தற்போது, தங்களது பதிவுகளை அகற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.