ம்றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மது அருந்தி இருப்பதாக உடற் கூராய்வில் தெரிய வந்துள்ளதாக சேலம் சரக டிஐஜி விளக்கம் அளித்துள்ளார்.
மறைந்த ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களாவின் கொள்ளை மற்றும் கொலை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சமி மீது குற்றம்சாட்டி சமீப்த்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சையி ஏற்படுத்தியுள்ள நிலையில் சயான் மற்றும் மனோஜ் என்பவர்க்ளை மத்திய குற்றவியல் காவல்துறையின்ர் கைது செய்தனர்.
டெல்லியில் கைது செய்யப்பட்ட இருவரும் நேற்றிறவு நீதிபதி சந்திராவின் இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன்பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் இறந்தது குறித்து விசாரணை மேற்கொண்ட சேலம் சரக டிஐஜி செந்தில் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
பேட்டியின் போது டிஐஜி செந்தில்குமார் பேசியதாவது, “ 2017ம் ஆண்டு ஏப்ரல் 28ல் ஆத்தூர் அருகே விபத்தில் சிக்கி கனகராஜ் உயிரிழந்தார். உடற் கூராய்வில் கனகராஜ் மது அருந்தியிருந்ததாக தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப்பின் கனகராஜன் பற்றி தனபால் பேசுவது ஏன் என்று தெரியவில்லை. மது அருந்திவிட்டு தவறான திசையில் வாகனம் ஓட்டி வந்த கனகராஜ் கார் மீது மோதி உயிரிழந்தார். தற்போது கனகராஜ் விபத்து குறித்து புகார் கூறும் தனபால் மாற்றிப் பேசி வருகிறார்.
விபத்தில் ஆட்சேபனை இருப்பதாக எந்தவித புகாரும் அளிக்கவில்லை. சேலம் சர்கத்தில் எந்த ஒரு விபத்து நடைபெற்றாலும் அது குறித்து தெரிவிக்கப்பட வேண்டியது எங்களது கடைமை. சம்பவம் அன்று வாகனத்தில் வந்த கனகராஜ் வலதுபுறமாக ஏறிச் சென்றுதான் விபத்தில் சிக்கினார். இந்த விபத்து தொடர்பான அறிவியல்பூர்வமான சான்றுகளை உங்களுக்கு தெரிவித்துள்ளோம். சம்பவத்தை நேரில் பார்த்ததாக எந்த சாட்சிகள் இல்லை “ என் கூறினார்.