சென்னை:

மிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கான  கல்வித் தொலைக்காட்சி வரும்  21ந்தேதி எடப்பாடி தொடங்கி வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கல்விக்கென 24 மணி நேரமும் செயல்பட உள்ள பிரத்யேக தொலைக்காட்சி  தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி  வரும் 21ம் கல்வி தொலைக்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது,

தமிழகத்தில் கல்விக் என்று தனி தொலைக்காட்சி ஒன்று துவங்கப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்திருந்தார். அதன்படி, வரும் 21 ஆம் தேதி இந்த தொலைக்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

இந்த தொலைக்காட்சியின் ஸ்டூடியோ சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டடத்தில் செயல்படும் என்றும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவியில் இந்த சேனல் 200 வது எண்ணில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு பாடம் தொடர்பான போட்டித்தேர்வு, நீட் தேர்வு போன்றவற்றுக்கு 50 ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த தொலைக்காட்சியில் விளம்பரம் எதுவும் இல்லாமல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும்.

மேலும், நிகழ்ச்சிகள் அனைத்தும் நாள் ஒன்றுக்கு இரண்டு முறைக்கு மேல் மறு ஒளிபரப்பு செய்யப்படும். இதன் மூலம் பெரும்பாலான மாணவர்கள் பள்ளி முடிந்த பிறகு கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை பார்க்க முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.