வுகாத்தி

சாம் மாநிலத்துக்குள் பிரதமர் மோடி நுழைய அனுமதிக்க மாட்டோம் என அசாம் மாநிலத்தில் உள்ள 70 அமைப்புக்கள் கூட்டுத் தலைவர் அகில் கோகாய் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டம் 1955 இல் மத்திய அரசு ஒரு திருத்த மசோதா கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா மக்களவையில் கடும் எதிர்ப்புக்கிடையே ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அத்துடன் ராஜ்ய சபையிலும் இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த மசோதா அசாம் உள்ளிட்ட எல்லைப்புற மக்களிடையே கடும் எதிர்ப்பை எழுப்பி உள்ளது.

இந்த சட்ட திருத்த மசோதாவில், “சட்டவிரோதமாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் இருந்து நாட்டுக்குள் நுழைந்தவர்களில் இந்துக்கள், சீக்கியர்கள், புத்தர்கள், சமணர்கள், பார்சிகள், மற்றும் கிறித்துவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது மற்ற மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அசாம் மாநிலத்தில் 70 அமைப்புக்களின் ஒன்றிணைப்பு தலைவரான அகில் கோகாய் செய்தியாளர்களிடம், “இந்த மசோதா அமுலாக்கப்பட்டால் பிரதமர் மோடி, மத்திய அமிச்சர்கள், பாஜக தலைவர்க்ள் உளீட யாரையும் அசாம் மாநிலத்தின் உள்ளே நுழைய அனுமதிக்க மாட்டோம். அத்துடன் அசாம் மாநில முதல்வர் உள்ளிட்ட அனைவரின் விழாக்களும் நடத்த விட மாட்டோம்.

அதை மீறி அசாம் முதல்வர் சர்பானந்த சோனோவால் மற்றும் அனைத்து அசாம் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நடத்தும் அனைத்துக் கூட்டங்களிலும் போராட்டங்கள் நடத்துவோம். அத்துடன் 2019 மக்களவை தேர்தலுக்கான பேரணிகளையும் நாங்கள் நடத்த அனுமதிக்க மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.