புதுச்சேரி:

ஃபேல் ஊழல்  தொடர்பான விசாரணையை  தடுக்கவே உச்சநீதி மன்றத்தால் மீண்டும் நியமிக்கப்பட்ட சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா இடமாற்றம் செய்யப் பட்டுள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டி உள்ளார்.

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா வுக்கும் இடையே நடைபெற்று வந்த மோதல் தொடர்பாக இருவரும் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டனர்.

மத்தியஅரசின் உத்தரவை எதிர்த்து அலோக் வர்மா வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், மத்தியஅரசின் உத்தரவை ரத்து செய்து, அலோக் வர்மா சிபிஐ இயக்குனராக தொடர அனுமதி வழங்கியது. இதுகுறித்து தேர்வு கமிட்டி கூடி முடிவு எடுக்கவும் உத்தரவிட்டது

இந்த நிலையில் சிபிஐ இயக்குனர் தேர்வுக் குழு பிரதமர் தலைமையில் நேற்று கூடிது. அதைத்தொடர்ந்து அலோக் வர்மா சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து மாற்றப்படும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து அலோக் வர்மா தீயணைப்பு துறை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். இந்த அதிரடி மாற்றங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ரஃபேல் ஒப்பந்தத்தில் நடந்த ஊழலை விசாரிக்க கூடாது என்பதற்காக சிபிஐ இயக்குநர் அலோக்வர்மா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று  நாராயணசாமி குற்றம் சாட்டினார்.

மேலும், புதுச்சேரியில் நீதிமன்ற தீர்ப்பைப் பொறுத்து பொங்கல் பரிசு வழங்கப் படும் என்றும் அவர் கூறினார்.