சண்டிகர்:

சோனியாகாந்தியின் மருமகன் ராபர் வதேரா உள்பட வணிக நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கியது தொடர்பாக, முன்னாள் முதல்வர் புபீந்தர்சிங் ஹூடா மீது  அமைக்கப்பட்ட திங்காரா கமிஷன் அறிக்கையை பஞ்சாப் அரியான உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

அரியானாவில் 2005 முதல் 2014ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி நடை பற்று வந்தது. மாநில முதல்வர் புபிந்தர்சிங் ஹுடா  இருந்து வந்தார். அப்போது,  சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா உள்பட சிலருக்கு  நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அரியானா மாநிலத்தில் உள்ள கு ர்கான் மாவட்டத்தின் மானேசர் பகுதியில் மாதிரி தொழில் நகரம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்களின் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக அரசு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

இதனை கிராம மக்களிடம் கூறி அவர்களிடம் பயத்தை உண்டாக்கிய ரியல்ஸ் எஸ்டேட் நிறுவனங்கள், மக்களிடம் இருந்து நிலங்களை சொற்ப விலைக்கு வாங்கியுள்ளனர். .

இது தொடர்பாக  ராபர்ட் வதேரா, அரியானா முன்னாள் முதல்வர் புபிந்தர்சிங் ஹுடா, ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிடி, டி.எல்.எப் நிறுவன இயக்குனர்களின் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து அடுத்து பாஜக குற்றம் சாட்டி வந்த நிலையில், அடுத்து ஆட்சிக்கு வந்த மனோகர் லால் கத்தார் தலைமையிலான ( Manohar Lal Khattar)  பாஜக அரசு 2015ம்ஆண்டு திங்காரா  விசாரணை கமிஷன் அமைத்தது.

இந்த விசாரணை கமிஷன் பஞ்சாப் அரியான உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கமிஷன் அறிக்கையை ஆய்வு செய்த உயர்நீதி மன்றம், அதை தள்ளுபடி செய்தது. இதன் காரணமாக புபீந்தர் ஹூடா உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.