ண்டன்

லக பொருளதார நாடுகளான 10 நாடுகளில் 7நாடுகள் 2030ல் உச்சத்தை அடையும் அளவுக்கு வளர்ந்து வருவதாக உலக பொருளாதார ஆய்வு தெரிவிக்கிறது.

உலகப் பொருளாதார நாடுகளாக 10 நாடுகள் குறிப்பிடப்படுகின்றன. இந்த நாடுகளின் வர்த்தக வளர்ச்சி குறித்து உலக பொருளாதார நிறுவனம் ஆய்வு ந்றை நிகழ்த்தியது. இந்த ஆய்வில் வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைய உள்ள நாடுகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.

இதில் இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகளின் வளர்ச்சிகள் குறித்டு ஆராயப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி உள்நாட்டு உற்பத்தி திறனை ஒட்டி கணக்கிடப்படுகிறது. அதாவது வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் அதிக பட்ச உள்நாட்டு உற்பத்தித் திறனை அடைய உள்ள நாடு முதலிடத்தை பிடிக்கிறது.

அவ்வகையில் இந்த கணக்கெடுப்பின் படி சீனா, இந்தியா, அமெரிக்கா, இந்தோநேசியா, துருக்கி, பிரேசில் எகிப்து ஆகிய நாடுகள் முதல் 7 இடத்தில் உள்ளன. ரஷ்யா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கடைசி மூன்று இடங்களில் உள்ளன. இந்த ஏழு நாடுகலில் முதல் மூன்று இடங்களில் சீனா, இந்தியா, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகல் உள்ளன.

உள்நாட்டு உற்பத்தி திறனில் அமெரிக்காவை விட இந்தியா வரும் 2030ல் முன்னேற்றம் அடையும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.