டில்லி

ந்திய ராணுவ தலைவர் பிபின் ராவத் ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ தாலிபன் தீவிர வாதிகளுட்ன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ரைசினா 2019 என்னும் சர்வதேச மாநாட்டில் பல நாட்டை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு அந்தந்த நாடுகளின் கொள்கைகள் குறித்து கலந்துரையாடினார்கள். இந்திய ராணுவத் தலைவர் பிபின் ராவத் இந்த மாநாட்டில் கலந்துக் கொண்டார். அப்போது அவரிடம் பயங்கரவாதம் குறித்த பல கேள்விகள் கேட்கப்பட்டன. அவர் அந்த கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

பிபின் ராவத் தனது பதிலில், “பயங்கரவாதம் என்பது பல முகங்கள் கொண்ட ஒரு ராட்சத மிருகம் ஆகும். அதை பல நாடுகள் பேணி வளர்ப்பதால் அந்த மிருகம் உயிர் வாழ்ந்து வருகிறது. இந்த நடவடிக்கையை அந்நாடுகள் கைவிட வேண்டும்” என பெயரைக் குறிப்பிடாமல் பாகிஸ்தான் நாட்டைப் பற்றி அவர் கூறினார். மேலும் அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்கு பிபின் ராவத், “தாலிபான் தீவிரவாத இயக்கத்துடன் நிபந்தனை அற்ற பேச்சு வார்த்தை நடத்துவதன் மூலம் அந்நாட்டில் அமைதி நிலவும் என நான் நம்புகிறேன். அந்த இயக்கம் பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்த பிறகே நிபந்தனைகள் குறித்து பேச வேண்டும். தாலிபான் பேச்சு வார்த்தை நடத்த முன்வராத வரையில் ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுவது நடவாத ஒன்றாகும்.

இது நமது விருப்பம், இந்த பகுதியின் விருப்பம் அத்துடன் பாகிஸ்தானின் விருப்பமாகும். பாகிஸ்தான் நாட்டின் 2400 கிமீ எல்லைப் பகுதி ஆப்கானிஸ்தான் அருகில் உள்ளது. எனவே பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானை தனது நாட்டின் கொல்லப்புறம் என கூறி வருகிறது. அந்த நாட்டின் அமைதியை காக்க கொல்லப்புற நாட்டிலும் அமைதியை நிலை நிறுத்த பாகிஸ்தான் முயல வேண்டும்.

காஷ்மீர் மாநிலத்தில் தற்போது இளைஞர்கள் தீவிரவாத இயக்கத்தில் அதிகமாக சேர்ந்து வருகின்றனர். இதற்கு சமூக நிலையே காரணமாகும். கடந்த வருட்ம் மட்டும் சுமார் 200 உள்ளூர் இளைஞர்கள் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளனர். இதில் அண்டை நாடுகளின் தவறான தகவல்களும் காரணமாக உள்ளது.

இந்தியர்களாகிய நாங்கள் ஒரு குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். குடும்ப உறுப்பினர்களில் ஒரு சிலர் தீவிரவாதத்தில் நாட்டம் கொள்ளலாம்.. ஆனால் மற்ற குடும்ப உறுப்பினர்கள் அது தவறானது என்பதை உணர வைக்க வேண்டும். குடும்பத்தின் மீது அக்கறை உள்ள யாரும் இது போல செய்து வெற்றி காண்பார்கள்” என பதில் அளித்துள்ளார்.