லக்னோ
உத்திரப் பிரதேச மாநிலத்தில் கூட்டணி மைக்க பாஜக கட்சிகளை தேடி வருகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் உத்திரப் பிரதேச மாநிலத்த்தில் உள்ள 80 தொகுதிகளில் பாஜக கூட்டணி 73 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் பாஜகவுடன் சுகல்தேவ் பாரத் சமாஜ் கட்சி மற்றும் அப்னா தள் ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருந்தன. இந்த வெற்றிக்கு அந்தக் கட்சிகளும் காரணம் என கூறப்பட்டது. தற்போது இந்த இரு கட்சிகளும் பாஜக கூட்டணியில் அதிருப்தியுடன் உள்ளன.
சென்ற மக்களவை தேர்தலின் போது இல்லாதபடி தற்போது உத்திரப் பிரதேச மாநிலத்தின் இரு பெரும் கட்சிகளான பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சி ஆகிய இரண்டும் கூட்டணி அமைத்துள்ளன. ஏற்கனவே கூட்டணியில் இருந்து இரு கட்சிகள் விலகிய நிலையில் பாஜகவுக்கு இந்த கூட்டணியும் ஒரு பின்னடைவு என கூறலாம்.
எனவே தற்போது பாஜக புதிய கூட்டணிக் கட்சிகளை உத்திரப் பிரதேச மாநிலத்தில் தேடி வருகிறது. முக்கியமாக சாதிக் கட்சிகளின் கூட்டணி மூலம் வாக்குகள் அதிகரிக்கும் என பாஜக நம்பி வருகிறது. அது மட்டுமின்றி அஜித் சிங் தலைமையிலான ராஷ்டிரிய லோக் தள் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாக கூறப்படுகிறது. இந்த வாய்ப்பை நழுவ விரும்பாத பாஜக அக்கட்சியை தங்கள் கூட்டணிக்குள் இழுக்க முயன்று வருகிறது.
தற்போதைய நிலையில் எதுவும் கூற இயலாத நிலை இருந்தாலும் பாஜகவால் இந்த முறை வலுவான கூட்டணி அமைந்தாலும்