இலாம்பஜார்:

ஜனநாயகத்தைப் பற்றி மேற்கு வங்கத்துக்கு கற்றுத் தரவேண்டிய அவசியம் இல்லை என பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார். ஆங்கில புத்தாண்டு அன்று பிரதமர் நரேந்திர மோடியின் ட்வீட் செய்தியில், என்ன நடக்கிறது மேற்கு வங்கத்தில். பாஜகவினர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது.

மம்தா பானர்ஜி

எங்கே போனது ஜனநாயம். கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கத்தில் பாஜகவினர் தாெடர்ந்து கொல்லப்படுகின்றனர். இங்கெல்லாம் பாஜகவுக்கு அடிப்படை ஜனநாயக உரிமை மறுக்கப்படுகிறது. அமைதியான அரசியலை முன்னெடுக்க அனைத்துக் கட்சிகளும் முன்வரவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த மம்தா பானர்ஜி, ~~ஜனநாயகத்தைப் பற்றி எங்களுக்கு பிரதமர் கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை. அவரது தலைமையிலான மத்திய அரசுதான் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பறிக்கிறது என்றார்.