பெங்களுர்:

பெசாவர் மடாதிபதி விஸ்வேஷா தீர்த்த சுவாமிகள் கூறும்போது, சபரிமைலக்கு பெண்கள் செல்ல தடை உள்ளது. அதேநேரம் இந்தியாவில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் செல்ல பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல், சபரிமலைக்கும் பெண்கள் செல்ல அனுமதிக்கலாம்.

இதில் சடங்கு சம்பிரதாயங்களை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இதில் வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இந்த விவகாரத்தில் நான் நடுநிலைமை வகிக்கின்றேன் என்றார்.
பாராய பலிமார் மடாதிபதி வித்யாதீச தீர்த்த சுவாமிகள் கூறும்போது, ~~மதத்துக்கு சில கட்டுப்பாடுகளும் சம்பிரதாயங்களும் உள்ளன. சபரிமைல விவகாரத்தில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்திலும் இதனை கடைபிடிக்க வேண்டும் என்றார்.
இதற்கிடையே, பெலாகாவில் உள்ள மடாதிபதி சன்னசித்தராமா சுவாமிகள் பெண்கள் தரிசனம் செய்ய ஆதரவு தெரிவித்துள்ளார்.
கடவுளுக்கு முன்பு ஆண்களும் பெண்களும் சமம். பெண்கள் கடவுளை தரிசிக்க எந்த கட்டுப்பாடும் கிடையாது. இதில் பாகுபாடு பார்க்கக் கூடாது. ஆண்களைப் போல பெண்களும் சபரிமலையில் தரிசனம் செய்யலாம் என்றார்.