டில்லி

சென்ற அக்டோபர் மாதத்தில் மட்டும் ரிலைன்ஸ் ஜியோ மொபைல் சேவையில் ஒரு கோட் பேர் இணைந்துள்ளனர்.

ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ மொபைல் சேவை அறிமுகம் செய்ததில் இருந்தே மிகக் குறைவான கட்டணம் வசூலித்து வருகிறது. இதனால் போட்டி நிறுவனங்கள் தங்களுடைய கட்டணத்தை குறைக்கும் நிலை ஏற்பட்டது. சமீபத்தில் ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கடுமையான இழப்பு காரணமாக இணைந்துள்ளன.

இந்நிலையில் இந்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “கடந்த அக்டோபர் மாதம் மொத்தம் 119, 14,00,000 தொலைபேசி இணைப்புக்கள் இந்தியாவில் இருந்தன. அதில் மொபைல் இணைப்புக்கள் 117 கோடி ஆகும். லேண்ட் லைன் இணைப்புக்கள் 2,20,000 ஆகும்.

அக்டோபர் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ ஒரு கோடி புதிய இணைப்புக்களை அளித்துள்ள்து. அரசு நிறுவனமான பி எஸ் என் எல் அக்டோபர் மாதத்தில் 3, 60,000 புதிய இணைப்புக்களை அளித்துள்ளது.

ஆனால் வோடபோன் – ஐடியா நிறுவனம் 73.61 லட்ச்ம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதுவே அதிக வாடிக்கையாளர்களை இழந்த நிறுவனமாகும்.

அக்டோபர் மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் 19.64 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் அதே கால கட்டத்தில் 9.25 லட்சம் வாடிக்கையாள்ர்களை இழந்துள்ளது” என டிராய் தெரிவித்துள்ளது.