டில்லி

சபரிமலை தீர்ப்பு என்பது பாரம்பரியத்துக்கு எதிரானது எனவும் முத்தலாக் தடை என்பது பாலின பாகுபாட்டுக்கு எதிரானது எனவும் மோடி தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் சபரிமலையில் இருந்த வழக்கத்தை மாற்றி அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்தி தீர்ப்பு  அளித்தது.   இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.   மத்திய அரசு சமீபத்தில் மக்களவையில் முத்தலாக் தடை மசோதாவை நிறைவேற்றி உள்ளது   இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

நேற்று புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி ஏ என் ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி என்னும் உச்சநீதிமன்ற தீர்ப்பை பாஜக எதிர்த்து வருகிறது.    ஆனால் முத்தலாக் தடை சட்டத்தை இயற்றுவதில் தீவிரம் காட்டுகிறது என விமர்சன்ங்கள் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் உள்ளிட்ட பல இஸ்லாமிய நாடுகள் முத்தலாக் முறையை தடை செய்துள்ளன.      இஸ்லாமிய நாடுகளே எதிர்க்கும் முறை என்பதால் அது மத அடைப்படையிலான விவகாரம் அல்ல என்பது தெளிவாகி உள்ளது.    அது சமூக நீதிக்கு எதிரான பாலின பாகுபாடு என்பதும் தெளிவாகி உள்ளது.   ஆகவே முத்தலாக் தடை என்பது பாலின பாகுபாட்டுக்கு எதிராகும்.

அதே நேரத்தில் சபரிமலை விவகாரம் பாரம்பரியம் மற்றும் மத உணர்வுகள் தொடர்பாகும்.    பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா இந்த தீர்ப்புக்கு எதிராக கருத்து கூறியதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.   ஆண்களுக்கு தடை விதிக்கும் சில கோவில்களும் உள்ளன.  அங்கு ஆண்கள் செல்வதில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.