திருமலை:
உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு கோலாகலமாக தொடங்கியது. உலக மக்கள் அனைவரும் புத்தாண்டை ஆடிப்பாடி வரவேற்றனர்.
பெரும்பாலோர் கோவில்களில் தாங்கள் விரும்பும் கடவுள்களை பிரார்த்தும் புத்தாண்டை வரவேற்றனர். இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புத்தாண்டு தரிசனத்தை காண லட்சகக்ணக்கானோர் திரண்டனர். இதன் காரணமாக கோவில் வளாகமே மக்கள் வெள்ளமாக காணப்பட்டது
ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோயில் முழுவதும் வண்ண மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களிலிருந்து பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட பூக்களைக் கொண்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் திரண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை கோவிந்தா கோவிந்தா என சரண கோஷத்துடன் வரவேற்றனர். சுமார் 12 மணி நேரம் வரிசையில் காத்திருந்த அவர்களுக்கு இன்று அதிகாலை காலை 4 மணி முதல் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
புத்தாண்டு அன்று ஏழுமலையானை தரிசித்தி மகிழ்சியில் மக்கள் திளைத்து வருகின்றனர்.
பக்தர்கள் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், இன்றும் நாளையும் திருப்பதி கோயிலில், ஆர்ஜித சேவைகள், விஐபி தரிசனம், நடைபாதை பக்தர்களுக்கான திவ்ய தரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கைக்குழந்தைகளின் பெற்றோர், நன்கொடையாளர்களுக்கான சிறப்பு தரிசனம், உள்ளிட்ட அனைத்து சேவைகளையும், திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
மேலும், இந்த இரு நாட்களும், விஐபி-களின் பரிந்துரை கடிதங்களை, பெற்று வருவோருக்கும் தரிசன அனுமதி இல்லை, என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனிடையே, புத்தாண்டையொட்டி, திருப்பதியில் போலீஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.