பொழுது போகாம, யூ டியூப்ல ஏதாவது காமெடி பாக்கலாம்னு கொஞ்சநேரம் மேய்ஞ்சேன். கீபோர்டு தானா “seeman” அப்படின்னு தட்டுச்சு.
“நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானின் கச்சத்தீவு மீட்பு பேச்சு” அப்படின்னு வந்துச்சு. க்ளிக்கினேன்.
ஆகா.. என்ன ஆவேசமா பேசுறார்…” நான் முதல்வர் ஆயிட்டேன்னா, ஐம்பது ஆயிரம் வீரர்கள் கொண்ட சிறப்புப்படை அமைச்சு கச்சத்தீவுக்கு போயி, அதை மீட்டுடுவேன்”னு டெரரா சொல்றாரு!
ரசிச்சு சிரிச்சேன்.
அப்ப பார்த்து, லைனுக்கு வந்தாரு, லண்டன்ல இருக்கிற பாலன். அவருகிட்ட இந்த காமெடிய சொன்னேன். அவரு, “ஏற்கெனவே நான் பார்த்து சிரிச்சிட்டேன். எனக்கு சில சந்தேகம்”னு சொல்லி சந்தே லிஸ்ட அவுத்துவுட்டாரு
(1) சீமான் தமிழ்நாட்டுக்கு முதல்வர் ஆயிட்டாருன்னே வச்சுக்குவோம். ஒரு மாநில முதலமைச்சர் படை அமைச்சு அந்நிய நாட்டுடோட சண்டைபோட மத்திய அரசு அனுமதிக்குமா?
(2)ஒருவேளை இலங்கை ராணுவம் வர்றதுக்கு முன்னாடி, இந்திய ராணுவமே வந்து, அம்பதாயிரம் பேர தலையில தட்டினா என்ன பண்ணுவாரு சீமான்?
(3) சரி.. இந்திய ராணும்தான் வரல.. அதுக்குள்ள இலங்கை ராணுவம் வந்துட்டா? இலங்கைகிட்ட 3 லட்சம் ராணுவ வீரருங்க இருக்காங்க.. அதோட, கடற்பட, விமானப்படையும் இருக்கு. சீமானோட “சிறப்புப்படை”யால தாக்கு பிடிக்க முடியுமா?
(4) போவட்டும்.. இலங்கை படையை, சீமானோட சிறப்புபடை சிதறடிச்சுடுச்சுன்னு வச்சுக்குவோம். இலங்கைக்கு ஆதரவா சீனா மாதிரி வல்லரசுங்க படை அனுப்பினா எப்படி சமாளிப்பாரு சீமான்?
– சொல்லிகிட்டே அவரு சிரிக்க.. கேட்டுகிட்டே நான் சிரிக்க.. சிரிப்பா சிரிச்சி போச்சு போங்க!
பின்குறிப்பு: சிரிச்சதுல மறந்துட்டேன்… இந்த காமெடிய காணத்தந்த தந்தி டிவிக்கு கோட்டானு கோடி நன்றிகள்!
- ரவுண்ட்ஸ்பாய்