டில்லி:

ந்தோனேசியாவில் நடைபெற உள்ள  18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க 620 வீரர் வீராங்கனை கள் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் அதிகாரிகளும் சேர்ந்து மொத்தம் 900 பேர் பங்கு பெற உள்ளனர்.  இந்த குழுவினர் ஆகஸ்டு மாதம்  இந்தோனேசியா செல்ல உள்ளனர்.

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசியை விளையாட்டு போட்டி  நடைபெற்று வருகிறது. கடந்த முறை 17வது ஆசிய விளையாட்டு போட்டிகள்  2014-ம் ஆண்டு தென் கொரியாவில் உள்ள இன்ஜியான் நகரில் நடைபெற்றது.

இந்த நிலையில், 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவில் நடைபெற இருக்கிறது. தலைநகர் ஜகார்தா மற்றும்  பலேம்பங்க் நகரங்களில் நடைபெற இருக்கிறது.

இந்த போட்டிகள்  ஆகஸ்ட் 18-ந்தேதி தொடங்கி,  செப்டம்பர் 2-ந்தேதி வரை  நடைபெறுகிறது.

இதில் கலந்துகொள்ள இந்தியாவை சேர்ந்த  620 வீரர்-வீராங்கனைகள் தேர்வாகி உளளனர். மேலும் அவர்களுடன்  273 அதிகாரிகள் உள்பட மொத்தம்  900 பேர் அடங்கிய அணி பங்கேற்க இருப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிநகர் பத்ரா தெரிவித்துள்ளார்.

ஆசிய போட்டியில் பங்கேற்க 2370 பேர் முதலில் தேர்வு செய்யப்பட்டு அதில் இருந்து திறமையானவர்கள் மட்டுமே செலக்ட் செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த  2014-ம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற  ஆசிய விளையாட்டுப் போட்டியில் 541 பேர் கொண்ட அணி கலந்து கொண்டு 28 பிரிவுகளில் பங்கேற்று 57 பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.